'அவர்கள் மென்மையானவர்கள்!'... ' நியூசிலாந்து குறித்து கோலி கருத்து'... 'நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்நியூசிலாந்து அணியை பழிதீர்ப்பீர்களா என்ற கேள்விக்கு விராட் கோலி பதில் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியது. அந்த போட்டியில், இந்திய அணி நியூசிலாந்தை எதிர் கொண்டது. விறுவிறுப்பாக சென்ற அப்போட்டியில், இந்திய அணி போராடி தோற்றது. உலகக் கோப்பைத் தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின்னர், தற்போது நியூசிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில், 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலியிடம், நியூசிலாந்து அணியை பழி தீர்க்குமா இந்தியா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, "உண்மையில், நாம் பழிவாங்க நினைத்தாலும் கூட, அவர்கள் (நியூசிலாந்து) மிகவும் மென்மையானவர்கள், அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே வராது. நியூசிலாந்து வீரர்களுடன் நல்ல புரிதல் உள்ளது. களத்தில் இருக்கும் போது போட்டி போட்டு விளையாடுவோம், அவ்வளவு தான். சர்வதேச அளவில் விளையாடுவதற்கு நியூசிலாந்து அணி சிறந்த உதாரணமாக திகழ்கிறது. அவர்கள் மீது நல்ல மரியாதை வைத்துள்ளோம்" என்றார்.
Can't help but Love the Kiwis 🇮🇳🇳🇿 #TeamIndia #NZvIND pic.twitter.com/9Qc3k35v5L
— BCCI (@BCCI) January 23, 2020