'பந்தை அடிக்க சொன்னா'... 'எத பாஸ் அடிக்கிறீங்க'?... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | May 20, 2019 09:43 AM
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் வீரர் சோகிப் மாலிக் அவுட் ஆன விதம்,மைதானத்தையே சிரிப்பலையால் அதிர வைத்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் 4வது போட்டி நாட்டிகாம் மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி,அதிரடியாக விளையாடி 340 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க முதலே அதிரடியாக விளையாடியது.பாகிஸ்தான் பௌலர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதற விட்டது.
இதையடுத்து 49.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி தனது இலக்கை எட்டி அதிரடி வெற்றியினை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் தொடக்க வீரர் ராய் 114 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.இந்த வெற்றியின் மூலம்,3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் சோகிப் மாலிக் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டாகிய விதம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மார்க் வுட் வீசிய பந்தில் பந்தை அடிப்பதற்கு பதிலாக,தவறுதலாக ஸ்டெம்பை அடித்து ஹிட் விக்கெட் முறையில் அவுடாகி நடையை கட்டினார்.அதிரடியாக விளையாடி வந்த அவர் 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தார்.சோகிப் மாலிக் அவுட் ஆன வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Pakistan vs England twitter updates, Shoaib Malik hit wicket #Newsaaptv#BreakingNews#PakvsEng#ShoaibMalik pic.twitter.com/SFgbJXcmZZ
— NewsAapTv (@NewsAapOfficial) May 17, 2019