காயத்தால் உலகக்கோப்பையில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்!.. மற்றொரு வீரருக்கு கிடைத்த வாய்ப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | May 07, 2019 08:27 PM
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சளார் காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான உலக் கோப்பை தொடர் வரும் மே மாதம் 30 -ம் தேதி முதல் இங்கிலாந்து நாட்டில் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து நாட்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருவதால், இது முடிந்த பின்னர் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த வெளிநாட்டு வீரர்களும் உலகக் கோப்பை பயிற்சியில் ஈடுபட நாடு திரும்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நார்ட் பயிற்சி ஆட்டத்தின் போது கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக கிறிஸ் மோரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்