'ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு'...ஆனா...'பினிஷிங் சரியில்லையேப்பா' !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | May 08, 2019 08:35 PM
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

பிளே ஆஃப் தகுதிச் சுற்றுப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் ஹைதராபாத்தில்,பலப்பரீட்சையை தொடங்கியுள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனிடையே இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் 3 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற டெல்லி அணி,நடந்த 3 தொடர்களிலும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய டெல்லி அணி முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இறுதியாக ரன்ரேட் அடிப்படையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.நடப்பு ஐபிஎல் சீசனில் லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் 2 முறை சந்தித்தன. இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், 2–வது ஆட்டத்தில் டெல்லி அணியும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.இன்றைய போட்டியில் வென்று தொடர் தோல்விகளுக்கு டெல்லி அணி முற்று புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.டெல்லி அணி கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் 7இல் வென்றுள்ளது. அதேபோல், ஹைதராபாத் அணி கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 7இல் தோல்வியை தழுவியுள்ளது.
