திறமையில் அவருக்கு பக்கத்தில் கூட யாராலும் வர முடியவில்லை - சேவாக் புகழ்ந்து தள்ளிய பிரபல வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | May 16, 2019 11:15 AM

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவிருக்கும் நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் பற்றி பேசியுள்ளார் சேவாக்.

hardik has become irreplaceable sehwag

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் மும்பை அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தார். உலகக்கோப்பை தொடரிலும் அவர் இதே ஃபார்மைத் தொடர வேண்டுமென இப்போதே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஐபிஎல் தொடரை வென்ற பிறகு அவரும், “ஐபிஎல் கோப்பையை வென்று விட்டோம், அடுத்து உலகக்கோப்பை தான்” எனக் கூறியிருந்தார்.  

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் ஊடகத்திற்கு பேட்டியளித்த சேவாக்,  “தொலைக்காட்சி பேட்டி சர்ச்சைக்குப் பிறகு திரும்பிய ஹர்திக் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் கலக்கி வரும் அவருக்கு நிகரான வீரர்கள் யாருமே இல்லை. அப்படி யாராவது இருந்திருந்தால் பிசிசிஐ அவரைத் தான் தேர்வு செய்திருக்கும். ஹர்திக் சந்தித்த பிரச்சனைகளுக்கு அவரால் அணிக்கு திரும்பியிருக்க முடியாது. அவருடைய திறமைக்கு பக்கத்தில் கூட யாராலும் வர முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா நிச்சயம் பெரிதாக சாதிப்பார் என பல முன்னாள் வீரர்களும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #SEHWAG #HARDIK #CRICKET #WORLDCUP2019