‘நம்ம ‘தல’க்கே டஃப் கொடுப்பாரு போல’.. அறிமுகப் போட்டியிலேயே வித்தியாசமான ஸ்டெம்பிங் செய்து வைரலான வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 05, 2019 05:13 PM

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஃபோக்ஸ் அயர்லாந்து வீரரை ஸ்டெம்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Ben Foakes controversial stumping goes viral

அயர்லாந்து நாட்டில், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிக்களுக்கு இடையேயான ஒருநாள் நடைபெற்றது. போட்டி நடைபெற்ற மைதானத்தில் ஈரப்பதம் நிலவிய காரணத்தால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 43.1 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் அயர்லாந்து வீரர் க்ரீஸில் இருந்து காலை தூக்கும் வரை காத்திருந்து ஸ்டெம்பிங் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது இவரின் அறிமுகப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #BEN FOAKES #CRICKET #ENGVSIRE #STUMPING #VIRALVIDEOS