'என்ன ஒரு குத்த போடலாமா' ?...'ரொம்ப எதிர்பார்த்த பாட்டு வந்தாச்சு' ... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | May 18, 2019 02:49 PM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக பாடல் ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த,உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது.போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில்,இந்திய அணி வரும் 22 ஆம் தேதி இங்கிலாந்து செல்ல இருக்கிறது.தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வரும் ஜூன் 5 ஆம் தேதி இந்திய அணி சந்திக்கிறது. உலகக்கோப்பை போட்டிகளை காண்பதற்கு பல லட்சம் ரசிகர்கள் இங்கிலாந்துக்கு வருவார்கள் என்பதால்,பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யபட்டு வருகிறது.பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியின் நினைவாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பைக்கான,அதிகாரப்பூர்வ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ’ஸ்டான்ட் பை’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் பாடகி லோரின் பாடியிருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட் டாப்,லாரின் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர்.இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது
