'24 வயதில் கபில்தேவ் தொட்ட சாதனை’.. 36 வருடங்களுக்கு பிறகு முறியடித்த 23 வயது வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 15, 2019 10:59 PM

1983-ஆம் வருடத்தை பலரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க வாய்ப்பில்லை. 

Imam-ul-Haq breaks Kapil Dev’s record in ODI after 36 years

ஈழப்போரும் இந்திய கிரிக்கெட்டும் கவனிக்கத்தக்கவைகளாக மாறிய மிக முக்கியமான இந்த வருடத்தில்தான், அப்போதைய 24 வயதேயாகியிருந்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ், ஒருநாள் போட்டியில் 150+ ரன்களைக் கடந்து சாதனை புரிந்திருந்தார். 

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய அந்த ஒருநாள் போட்டியில், 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து இந்தியா தவித்து வந்தபோது களமிறங்கிய கபில்தேவ், முதலில் 2 பவுண்டரிகளை அடித்து ஸ்கோரை 17ஆக மாற்றினார். ஆனால் அப்போது இந்திய அணி மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. 

அதன் பின்னர், கபில்தேவின் வெறித்தனமான ஆட்டத்தால் 175க்கு நாட்-அவுட் என்று ஸ்கோர் செய்தார். மேற்கண்ட சாதனையையும் தொட்டார். சுமார் 36 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்த மேட்சுக்கு பிறகு, இந்த சாதனையை தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம்-உல்-ஹக் முறியடித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிராக தற்போது பாகிஸ்தான் விளையாடியுள்ள ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் 23 வயதேயான இளம் வீரரான இமாம்-அல்-ஹக் 150+ ரன்களை ஸ்கோர் செய்து கபிலின் சாதனையை முறியடித்துள்ளார். எனினும் இந்த போட்டியில் பாகிஸ்தானை இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Tags : #IMAMULHAQ #KAPILDEV #CRICKET #PAKVENG #INDIA #RECORD