'ஓப்பனிங்க்கு இவர் தான் இறங்க போறாரா'?... வருகிறது அதிரடி மாற்றம் ?... 'தல' எடுக்க போகும் முடிவு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 09, 2019 12:28 PM

விசாகப்பட்டினத்தில் வரும் 10ம் தேதி நடக்கவிருக்கும் ‘குவாலிபயர்-2’ போட்டிக்கான சென்னை அணியில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

3 Changes Chennai Super Kings need to make qualify for finals

கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.நடந்து முடிந்த லீக் போட்டிகளின் முடிவில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. இதில் சென்னையில் நடந்த முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக ‘ஃபைனலுக்கு’ முன்னேறியது.நேற்று நடைபெற்ற ‘எலிமினேட்டர்’ சுற்றுப்போட்டியில் ஹைதராபாத் அணியினை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2-வது தகுதி சுற்று ஆட்டத்திற்கு தகுதி பெற்றிருக்கும் டெல்லி அணி நாளை நடைபெற இருக்கும் போட்டியில் சென்னை அணியுடன் மோத இருக்கிறது. இந்நிலையில் மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த சென்னை அணி, நாளை நடைபெறும் போட்டியில் நிச்சயம் டெல்லி அணியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.இதனால் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி ஷேன் வாட்சனுக்கு பதிலாக முரளி விஜய்யை துவக்க வீரராக களமிறக்கவும்,மிடில் ஆர்டரில் துருவ் சோரேவையும் கொண்டுவரவும் திட்டமிடப்படுவதாகவும் தகவல்கள் தெரிகிறது.அதே போன்று வேகப்பந்து வீச்சில் சென்னை அணி தீபக் சகாரை நம்பியுள்ளதால், மோகித் சர்மா, ஸ்காட் குகேஜிலின் ஆகியோரில் ஒருவர் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.