‘கடல் கடந்து டி20 போட்டியில் விளையாட உள்ள ஆல்ரவுண்டர்’.. வரலாற்று சாதனை படைத்த முதல் இந்திய வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 17, 2019 06:34 PM

வெஸ்ட் இண்டீஸ் நடைபெற இருக்கும் கரீபியன் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட இருக்கிறார்.

Indian all rounder Irfan Pathan signs up for CPL players draft

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போல, வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் டி20 லீக் தொடங்க உள்ளது. பொதுவாக வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிப்பதில்லை.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ள கரீபியன் டி20 தொடரில் விளையாட இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தேர்வாகி வரலாற்று சாதனை படைத்துள்ளார். நடைபெற உள்ள கரீபியன் பிரிமயர் லீக் தொடரில் விளையாட ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்களில் பட்டியலில் இர்பான் பதானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 6 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியில், இர்பான் பதான் எந்த அணியில் விளையாடுவார் என்பது ஏலம் முடிந்த பின்னர் தெரியவரும்.

மொத்தம் 20 நாடுகளை சேர்ந்த 536 வீரர்களின் வரைவுபட்டியலில் அலெக்ஸ் ஹால்ஸ், ரஷித் கான், ஷகிப் அல் ஹாசன், ஆர்ச்சர் மற்றும் டுமினி போன்ற வீரர்களும் இடம்பெறுள்ளனர். இந்த தொடர் வரும் செப்டம்பர் மாதம் 4 -ம் தேதி துவங்கி அக்டோபர் 12 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Tags : #TEAMINDIA #CRICKET #IRFAN PATHAN #CPL