‘2 நட்சத்திர வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்’.. உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 17, 2019 05:12 PM

உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இரு முக்கிய வீரர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

World Cup 2019: Asif Ali, Mohammad Amir included in Pakistan squad

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பை தொடர் வரும் 30 -ம் தேதி முதல் இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. உலகக்கோப்பையை பெற வேண்டிய முனைப்பில் அனைத்து நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒரு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. மேலும் இதுவரை நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டியில் 2 -ல் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி முன்னை வகித்து வருகிறது. உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சமயத்தில் பாகிஸ்தானின் இந்த தொடர் தோல்வி அந்நாட்டு வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் சார்பாக உலகக்கோப்பையில் விளையாட அந்நாட்டு அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் மற்றும் பேட்ஸ்மேன் ஆசிப் அலி சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் முதலில் வெளியான உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முகமது அமிர் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : #ICCWORLDCUP2019 #MOHAMMAD AMIR #ASIF ALI #PAKISTAN