‘அது சச்சினோட பேட்.. அதுதான் முதல் மேட்ச்லயே சதம் அடிக்கக் காரணம்’.. இன்னும் பல ரகசியங்களை உடைத்த வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | May 06, 2019 12:27 PM
சச்சினின் பேட்டைக் கொண்டு விளையாண்டு, தான் முதல் சதம் அடித்ததாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி அதிரடியாகக் கூறியுள்ளார்.
1996-ஆம் ஆண்டு டி20 இல்லாத காலக்கட்டத்தில் 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தியவர் அஃப்ரிடி. இவர் சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள சுயசரிதை நூலான கேம் சேஞ்சர் எனும் புத்தகத்தில், சச்சினின் பேட் தனக்கு உதவியது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
சமீர் ஃபோர் நேஷன்ஸ் கப் தொடரில் கென்யாவுக்குச் சென்ற பாகிஸ்தான் அணி அங்கு இலங்கை, தென் ஆப்பிரிக்கா, கென்யா உள்ளிட்ட அணிகளுடனான தொடரில் விளையாண்டது. அதில் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான மேட்சில் விளையாடும் வாய்ப்பு பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் முஸ்தாக் அகமதுவுக்கு அமையவில்லை என்பதால், அவருக்குப் பதிலாக அஃப்ரிடிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த முதல் போட்டியிலேயே அஃப்ரிடி அதிரடி காட்டி 37 பந்துகளில் சதமடித்து வரலாற்று சாதனையை படைத்தார்.
இதுபற்றி அந்த புத்தகத்தில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவாந் சச்சின் டெண்டுல்கர் தனது பேட்டை வக்கார் யூனிஸிடம் கொடுத்ததாகவும், வக்கார் யூனிஸ் அந்த பேட்டை தன்னிடம் கொடுத்ததாகவும், அதைக்கொண்டு பயிற்சி எடுத்துதான், தனது முதல் மேட்சில், தான் முதல் சதம் எடுத்ததாகவும் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த சதத்தை அடிக்கும்போது தனக்கு 16 வயது என்று அதிகாரிகள் குறிப்பிட்டிருந்ததாகவும், அது உண்மையில்லை என்றும், 1975-ல் பிறந்த தனக்கு அந்த மேட்சில் 19 வயதாகியிருந்ததாகவும், உண்மையான ரகசியத்தை இந்த புத்தகத்தில் அஃப்ரிடி உடைத்துக் கூறியுள்ளார்.