‘தனித்தனியா இருக்கும்போதே தாறுமாறு, இப்போ ஒன்னா சேர்ந்தா’.. உலக்கோப்பையை கலக்க வரும் சிஎஸ்கே, மும்பை அணியின் அதிரடி வீரர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 19, 2019 11:07 PM

உலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரு முக்கிய வீரர்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

World Cup 2019: Bravo, Pollard picked as World Cup reserves

இங்கிலாந்து நாட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகான உலகக்கோப்பை தொடர் வரும் மே 30 -தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வேறு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் காயத்தில் இருந்து மீண்டு மறுபடியும் இந்திய அணியில் இணைந்துள்ளார். மேலும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் மற்றும் அம்பட்டி ராயுடு போன்ற வீரர்கள் இல்லாதது சர்ச்சையை கிளப்பியது. இதனால் இவர்கள் இருவரும் ரிவர்ஸ் வீரர்கள் எனப்படும், காயம் அடையும் வீரர்களுக்கு மாற்று வீரர்களாக களமிறங்கும் வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களான பிராவோ மற்றும் பொல்லார்ட் ஆகிய இருவரும் ரிவர்ஸ் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #ICC #BRAVO #POLLARD