'இது 'தோனி'க்கு கடைசி உலககோப்பையா'?...'தல' இத மட்டும் பண்ணனும்...மனம் திறந்த 'பிரபல வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | May 18, 2019 01:35 PM
உலககோப்பை போட்டிகள் நெருங்கி வரும் நிலையில்,இந்திய ரசிகர்களின் முழு கவனமும் தோனி மீது திரும்பியுள்ளது.இது தோனிக்கு கடைசி உலககோப்பையாக இருக்கலாம் என்பதால்,ரசிகர்கள் அவரது ஆட்டத்தை காண்பதற்கு ஆவலாக உள்ளார்கள்.இதனிடையே தோனியின்ஆட்ட திறன் குறித்து,ஹர்பஜன் சிங் மனம் திறந்து பேசியுள்ளார்.
பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்குப் அளித்துள்ள பேட்டியில் ''தோனி களத்திற்கு வரும் போது எப்போதுமே நிதானமாக தனது ஆட்டத்தை துவங்கி பின்னர் அதிரடியாக விளையாடுவர்.ஆனால் வரும் உலகக்கோப்பை போட்டிகளில் அவர் நிச்சயமாக அதிரடியாக விளையாட வேண்டும்.அவர் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடிய பல இன்னிங்ஸ்கள் இருக்கிறது.
ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, கோலி, ராகுல் போன்ற வீரர்கள் தொடக்கத்தில் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிப்பார்கள்.எனவே தோனி நிச்சயமாக அதிரடியாக விளையாடலாம்.சில ஸ்பின்னர்களிடம் தோனியின் ஆட்டம் செல்லாது என கூறுவார்கள்.ஆனால் எந்த ஸ்பின்னராக இருந்தாலும் அவரின் இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பும் திறமை தோனியிடம் உண்டு.சென்னை அணியுடன் விளையாடும் போது அவருடன் இருந்து அவரின் வலைப்பயிற்சியினை பார்த்திருக்கிறேன்.எனவே என்னால் உறுதியாக கூற முடியும்.
அவரது உடற்தகுதி குறித்து எந்த சந்தேகமும் எழுப்ப தேவையில்லை.ஆட்டத்தின் போக்கு அறிந்து எப்போதுமே அவர் ஆடுவார்.இந்திய அணியில் 4- வது இடம் குறித்து கவலைப்படும் வேளையில்,நிச்சயமாக 6-வது இடம் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டும்.4-வது இடத்திற்கு ராகுலைத் தவிர பொருத்தமானவர் வேறு ஒருவர் இல்லை'' என தெரிவித்தார்.
மேலும் பும்ரா குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹர்பஜன் ''சச்சின், பும்ராவை உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றிருக்கிறார்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.அவரை அணியில் இருந்து எடுத்தால்,அது உங்களின் உடலில் இருந்து இதயத்தை எடுப்பதற்கு சமம்.இந்திய பந்துவீச்சில் அவர் ஒரு விராட் கோலி போன்றவர்” என கூறினார்.