‘விக்கெட் கீப்பர் மனைவியிடம் கத்தி முனையில் நடந்த கொள்ளை’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 16, 2019 12:18 PM

ஜிம்பாப்பே கிரிக்கெட்டின் விக்கெட் கீப்பர் மனைவிடம் வீட்டு வாசலில் வைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zimbabwe cricketer Brendan Taylor’s wife mugged outside their home

ஜிம்பாப்பே கிரிக்கெட்டின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பிரெண்டன் டெய்லர், ஜிம்பாவே அணிக்காக 188 ஒருநாள் போட்டி மற்றும் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். குடும்பத்துடன் ஹராரே என்னும் பகுதியில் வசித்து வரும் டெய்லர், தனது மனைவியிடம் மர்ம நபர்கள் சிலர் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அப்பதிவில்,‘நான் என் மனைவிக்காக வீட்டுக்கு வெளியே காத்திருந்தேன். அப்போது என் மனைவி கத்தும் சத்தம் கேட்டு வேகமாக சென்றேன். ஆனால் கையில் கத்தியுடன் இருந்த 4 பேர் என் மனைவின் கையில் வைத்திருந்த பையை கொள்ளை அடித்து சிவப்பு நிற காரில் தப்பி சென்றுவிட்டனர். அதிர்ஷ்டவசமாக எனது மனைவி அவரின் கைப்பையை மட்டும் இழந்தார்.இதனால் மக்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags : #ZIMBABWE #BRENDANTAYLOR #THEFT #CRICKET