பிரபல 'நடிகையை' மணக்கும்.. இந்திய 'கிரிக்கெட்' வீரர்?.. விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 10, 2019 08:22 PM

விஜய் ஹசாரே போட்டியில் கர்நாடக அணியின் முக்கிய வீரராகவும், ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருபவர் மனிஷ் பாண்டே. இந்திய கிரிக்கெட்  அணியின் இளம் வீரர்களில் ஒருவரான இவருக்கும், பிரபல தென்னிந்திய நடிகையான அஷ்ரிதா ஷெட்டிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Manish Pandey to marry actress Ashrita Shetty?, Details Inside!

அஷ்ரிதா ஷெட்டி தமிழில் உதயம் NH4, இந்திரஜித், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் ஆகிய படத்தில் நடித்திருக்கிறார். மனிஷ்-அஷ்ரிதா இருவரும் ரகசியமாக காதலித்து வந்ததாகவும், வரும் டிசம்பர் 2-ம் தேதி இருவரின் திருமணமும் மும்பையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : #CRICKET #IPL