‘ஆக்ரோஷமாக முறுக்கிக் கொண்ட வீரர்கள்.. சூடான வார்த்தைப் போர்’.. பரபரப்பு வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Oct 08, 2019 12:30 PM
வெஸ்ட் இண்டீஸில் நடந்து வரும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் தகுதிச் சுற்றில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் எலிமினேட்டர் சுற்றில், வெற்றி பெற்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும், முதல் தகுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவிய ட்ரைடண்ட்ஸ் அணிக்கும் இடையே 2வது தகுதிச் சுற்றுப் போட்டி 10-ஆம் தேதி நிகழவுள்ளது.

இந்நிலையில், எலிமினேட்டர் சுற்றில் மோதிய பாட்ரியாட்ஸ் அணிக்கும் நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையேயான போட்டியில் 125 ரன்களுக்கு பாட்ரியாஸ் அணி சுருண்டது. இதனையடுத்து நைட் ரைடர்ஸ் அணி 126 என்கிற இலக்குடன் ஆடியது. இதில் அந்த அணியின் தொடக்க வீரர் லெண்டல் சிம்மன்ஸ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். பொல்லார்டும் தன் பங்குக்கு 9 பந்துகளில் 26 ரன்களை விளாசினார். இப்போட்டியில் நைட் ரைடர்ஸ் தொடக்க வீரர் சிம்மன்ஸ்க்கும் பாட்ரியாட்ஸ் கேப்டன் கார்லஸ் பிராத்வொய்ட்டுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஃபேபியன் ஆலன் வீசிய 8வது ஓவரில் பந்தை ராம்தின் அடித்த கையோடு சிம்மன்ஸூம் ராம்தினும் சிங்கிள் ஓடினர். பின்னர் கிரீஸை விட்டு வந்து டிஸ்கஸ் செய்தனர். ஆனால் அந்த சமயத்தில் பாட்ரியாட்ஸ் கேப்டன் பிராத்வொய்ட் பந்தை பிடித்து ஸ்டெம்பில் அடித்துவிட்டு செய்துவிட்டு, ரன் அவுட்டுக்கு அப்பீல் செய்துவிட்டார். ஆனால் அம்பயரோ அவுட் கொடுக்க மறுத்ததால், பிராத்வொய்ட்டுக்கும், சிம்மன்ஸுக்கும் இடையே வார்த்தைப் போர் எழுந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் முண்டிக்கொண்டு வர, ஃபீல்டு அம்பயர்கள் அவர்களை ஆசுவாசப்படுத்தினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
— Sports Freak (@SPOVDO) October 8, 2019
