கிரிக்கெட் போட்டியின் போது திடீரென சுருண்டு விழுந்த அம்பயர்..! சோகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 09, 2019 06:11 PM

பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் அம்பயர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Umpire dies in Pakistan after suffering heart attack on ground

பாகிஸ்தானில் உள்ள கராச்சி மைதானத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 52 வயதான நஷீம் ஷேக் நடுவராக இருந்தார். போட்டியின் நடுவே நஷீம் ஷேக் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இதனால் உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாரடைப்பால் நஷீம் ஷேக் உயிரிழந்ததாக தெரிவித்தனர். கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் மாரடைப்பால் அம்பயர் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #PAKISTAN #CRICKET #UMPIRE #HEARTATTACK #NASEEMSHEIKH #GROUND