என் பந்த அடிக்க நீங்க 'தெணறுன' மாதிரி .. என் பர்த்டே.. ரொம்ப 'நல்லா' இருந்துச்சு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 09, 2019 10:49 AM

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜாகிர்கான் கடந்த 7-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா வீடியோ ஒன்றை பதிவிட்டு ஜாகீருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

Zaheer Khan\'s Response for Hardik Pandya\'s Birthday Wish

அதில் அவர் உங்கள் பந்தை நான் அடித்து நொறுக்குவது போல உங்கள் பர்த்டேவை நீங்கள் கொண்டாட வேண்டும் என தெரிவித்து இருந்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பலரும் ஹர்திக் பாண்டியாவை  வறுத்து எடுத்தனர்.

இந்தநிலையில் பர்த்டே பாய் ஜாகீர், ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் அளித்துள்ளார். அதில்,'' வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்க அளவுக்கு எனக்கு பேட்டிங் பத்தி தெரியாது. அதே மேட்சில் நான் போட்ட அடுத்த பந்தை நீங்கள் எதிர்கொண்டது போல என் பர்த்டே மிகவும் நன்றாக இருந்தது,'' என செம கூல் ரிப்ளை கொடுத்து இருக்கிறார். இது நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் தான் பர்த்டே கொண்டாடும் வீடியோ ஒன்றையும் ஜாகீர் வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.