'பர்த்டே' பாய் அவருதான்.. ஆனா போட்டு இருக்குற.. 'டீஷர்ட்' என்னோடது!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 08, 2019 06:15 PM

ஐபிஎல் அணிகளில் விளையாடும் ஒவ்வொரு வீரரின் சந்தோஷமான நிகழ்வுகளை அந்த அணியும் சேர்ந்து பகிர்ந்து கொள்கிறது. குறிப்பாக சென்னை அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும் சென்னை மீதும், அணி  மீதும் மிகுந்த பாசம் வைத்திருப்பதை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

He\'s the birthday boy, but that t-shirt\'s mine, CSK shares lovely pic

அந்த வகையில் சென்னை அணி வீரர் டேவிட் வில்லே தனது மகனின் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். அப்போது அவரது குட்டி மகன் ஜேக்கப் வில்லே சென்னை அணியின் டீஷர்ட் அணிந்து பர்த்டே கொண்டாடி இருக்கிறார். இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சென்னை அணி,''எத்தனையோ கலர்கள் இருக்க வில்லே செலக்ட் செய்திருக்கும் கலரைப் பாருங்கள்,' என மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து,'' வில்லே தற்போது படையப்பாவாக இருந்தால். பர்த்டே உனக்காக இருக்கலாம். ஆனா போட்டு இருக்குற டிரெஸ் என்னோடது,'' என சொல்லி இருப்பார். என்று பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளது.