VIDEO: 'ஓட்டப்பந்தயம்' போல ஒரே பக்கம் ஓடி.. இதென்ன 'ஸ்கூல்' கிரிக்கெட்டா?.. வறுக்கும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 08, 2019 12:07 PM

இலங்கைக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் பாகிஸ்தான் வீரர்களின் ரன் அவுட் சம்பவம் வைரலாகி வருகிறது.

Pakistan batsman run out video goes viral, Twitter Trolls

பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதிய முதலாவது டி 20 போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 166 ரன்கள் எடுத்து. தொடர்ந்து 2-வதாக பேட் செய்த பாகிஸ்தான் அணி 22 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதனால் களத்தில் நின்ற சர்பராஸ் அஹமதுவும், இப்கிதாரும் நிலைத்து நின்று விளையாட முயற்சி செய்தனர். ஆனால் அது நிலைக்கவில்லை.

via Gfycat

12-வது ஓவரின் 2-வது பந்தை எதிர்கொண்ட இப்கிதார் ரன்கள் ஓடுவதற்காக வந்து,முடியாமல் மீண்டும் கிரீஸுக்கு திரும்பினார். இதைக் கவனிக்காமல் சர்பராஸ் அஹமதுவும் எதிர்திசையில் ஓட கடைசியில் இருவரும் விக்கெட் கீப்பர் பக்கமே ஓடி கிரீஸை தொட்டனர். முடிவில் 3-வது அம்பயர் டிவியில் பார்த்து இப்கிதார் அவுட் என்று அறிவித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. ஸ்கூல் கிரிக்கெட்டில் கூட இப்படி ஒரு ரன்-அவுட்டை பார்த்தது இல்லை என்று நெட்டிசன்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை வறுத்து எடுத்து வருகின்றனர். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.