‘கிரிக்கெட்டில் 80 ஆண்டுகளுக்குப் பின்’.. ‘மோசமான சாதனையைப் பதிவு செய்த இந்திய வீரர்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Oct 08, 2019 05:41 PM

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா 80 ஆண்டுகளுக்குப் பின் மோசமான சாதனை ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

IND vs SA Rohit Sharma repeats 80 YO unwanted feat

விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதமடித்த ரோஹித் ஷர்மா பல சாதனைகளை முறியடித்தார். அத்துடன் இந்தப் போட்டியில் அவர் மோசமான சாதனை ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் ரோஹித் ஷர்மாவை தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் கேஷவ் மகராஜ் பந்துவீச்சில் டிகாக் ஸ்டெம்பிங் செய்துள்ளார். இப்படி 2 இன்னிங்ஸிலும் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர் இவர்தான். கடைசியாக 1939ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வாலி ஹம்மண்ட் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இதேபோல 2 முறை ஆட்டமிழந்துள்ளார்.

Tags : #INDVSSA #TEST #TEAMINDIA #ROHITSHARMA #UNWANTED #80YEAROLD #FEAT #RECORD #STUMPING #OUT