‘டி20 போட்டிக்கு இவர கேப்டனா ஆக்கலாம்’.. யுவராஜ் சிங் சொன்ன புது யோசனை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Sep 27, 2019 06:05 PM
குறைந்த ஓவர் போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான தோனி தன் கேப்டன் பதிவியில் இருந்து விலகியது முதல் அனைத்து விதமான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இது அவருக்கு அதிக நெருக்கடியை உண்டாக்கும் என்றும், அதனால் குறைந்த ஓவர் (டி20) போட்டிகளுக்கு வேறு ஒரு கேப்டனை நியமிக்கலாம் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ‘முன்பு ஒருநாள், டெஸ்ட் என இரண்டு போட்டிகள் மட்டும் இருந்தது. இதனால் கேப்டன்களுக்கு அதிகமான நெருக்கடி இருக்காது. ஆனால் டி20 கிரிக்கெட் போட்டி வந்ததில் இருந்து கேப்டன்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விராட் கோலி மீதும் இந்த வகையான நெருக்கடியே அதிகமாக உள்ளது. அதனால் குறைந்த ஓவர் போட்டிகளுக்கு வேறு ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், ‘என்னைப் பொருத்தவரை ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்கலாம். ஏனென்றால் கேப்டனாக அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனாலும் விராட் கோலியால் எந்த அளவுக்கு நெருக்கடியை தாங்க முடியும் என அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்’ என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
