'முதல்ல உங்க நாட்டு பிரச்சனைய பாருங்க’... ‘பாகிஸ்தான் வீரரை விளாசித் தள்ளிய இந்திய வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Sep 30, 2019 11:46 AM
பாகிஸ்தான் நாட்டு வீரர்களுக்கு இந்திய அணியின் முன்னணி வீரரான ஷிகர் தவான் தக்க பதிலடி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஷிகர் தவான், இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார். இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தவான், ‘நம் நாட்டுக்கு எதிராக சிலர் பேசும்போது, அர்களுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். வெளியாட்கள் நமக்கு அறிவுரை வழங்கத் தேவையில்லை. முதலில் உங்கள் நாட்டு பிரச்னைகளைச் சரிசெய்துவிட்டு, அடுத்த நாட்டைப்பற்றி பேசுங்கள். பொதுவாக, “கண்ணாடி மாளிகையில் இருந்துகொண்டு அடுத்தவர்கள் மீது கல்லெறியக் கூடாது’’ என்று கூறுவார்கள்’ என்று பாகிஸ்தான் வீரர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம், இதேபோன்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய, பாகிஸ்தான் நாட்டு வீரர் ஷாகித் அப்ரிடிக்கு, ட்விட்டரில், இந்திய வீரர் தவான் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், மீண்டும் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு வீரர்களுக்கு, தவான் பதிலடி கொடுத்திருக்கிறார்.
