‘பும்ராவைத் தொடர்ந்து மற்றொரு வீரர் காயம்’... ‘கவலையில் ரசிகர்கள்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Oct 03, 2019 11:22 AM
ஜஸ்பிரித் பும்ராவைத் தொடர்ந்து, ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவின் கீழ் இடுப்புப் பகுதியில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துபாயில் நடைப்பெற்ற ஆசியா கோப்பையின்போது காயம் ஏற்பட்டது. அப்போது லண்டனில் சிகிச்சை மேற்கொண்ட அவர், காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் உலகக் கோப்பையில் இடம் பிடித்தார். அதன்பிறகும் காயத்தால் அவதிப்பட்டு வந்த பாண்ட்யா, தற்போது லண்டனுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக செல்கிறார்.
தொடர்ந்து விளையாட முடியாத காரணத்தால் ஏற்கனவே, தென் ஆப்ரிக்கா தொடரில் இருந்து விலகிய அவர், அடுத்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. அணியின் முக்கிய வீரரான ஹர்திக் பாண்ட்யா அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைப்பெறும் டி20 போட்டியில் இடம் பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில் அவர் காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டால், நீண்ட காலம் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அணிக்கு திரும்ப 5 முதல் ஆறு மாதங்கள் வரை ஆகும் என பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. 25 வயதான ஹர்திக் பாண்ட்யா, இந்திய அணியில் பும்ராவுக்கு அடுத்து மிரட்டல் விடுக்கும் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். அடுத்தடுத்து வீரர்கள் காயத்தால் பாதிக்கப்படுவதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.