இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணியில் விளையாடிய தமிழக வீரர்..! முதல் டெஸ்ட்டில் நடந்த சர்ப்ரைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Oct 02, 2019 09:39 PM
இந்தியா-தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சார்பில் தமிழக வீரர் சீனுரான் முத்துசாமி என்ற வீரர் களமிறங்கினார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி இன்று (02.10.2019) விசாகப்பட்டிணம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்களை இந்திய அணி எடுத்தது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 115 ரன்களும், மயனங் அகர்வால் 84 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சீனுரான் முத்துசாமி என்ற அறிமுக வீரர் களமிறங்கியுள்ளார். நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த சீனுரான் முத்துசாமி தென் ஆப்பிரிக்க அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். இவரது குடும்பம் 25 ஆண்டுகளுக்கு முன்னரே தென் ஆப்பிரிக்காவில் குடிபெயர்ந்துள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், ‘என்னுடைய பூர்வீகம் சென்னை. நாகப்பட்டிணத்தில்தான் என் குடும்ப உறவினர்கள் உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய குடும்பத்தினர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் என்ற நகருக்கு குடிபெயர்ந்துவிட்டனர். இந்தியா வந்ததும் என் தாய்விட்டுக்கு வந்ததுபோல் இருந்தது. தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெறுவதற்காக என் பெற்றோர் தீவிரமாக என்னை தயார் செய்தார்கள். என் கனவு நிறைவேறிவிட்டது’ என கூறியுள்ளார்.