‘டிராவிட்டுக்கு வந்த அதே பிரச்சனை’.. திடீரென முக்கிய பதவியை ராஜினாமா செய்த முன்னாள் கேப்டன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 02, 2019 07:29 PM

இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசனை குழு தலைவர் பதவியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ராஜினாமா செய்துள்ளார்.

Kapil Dev has quit from the ad hoc Cricket Advisory Committee

இரட்டைப் பதவி குறித்த சர்ச்சை சில காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து வருகிறது. இந்த சர்ச்சையில் இந்திய அணியின் ஜாம்பான்களும், முன்னாள் வீரர்களுமான சச்சின், டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் சிக்கினர். அதில் டிராவிட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு இரண்டு பதவி வகிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பட்டு, அதற்கு அவர் விளக்கமும் அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசனை குழுவின் தலைவராக இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கும் இதேபோல் நோட்டீஸ் அனுப்பட்டது. இதனை அடுத்து ஆலோசனை குழுவின் தலைவர் பதிவியை கபில் தேவ் ராஜினாமா செய்துள்ளார். மேலும் இந்த குழுவில் இருந்த மற்றொரு உறுப்பினரான ரங்கசாமி என்பவரும் ராஜினாமா செய்துள்ளார்.

Tags : #BCCI #KAPILDEV #RESIGNS #CAC #TEAMINDIA