‘இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்’.. ‘இந்திய அணியில் விக்கெட் கீப்பர் மாற்றம்’.. பிசிசிஐ அதிரடி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 01, 2019 01:57 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியிலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

IND v SA: Rishabh Pant dropped from playing XI, Saha to keep wickets

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரு அணிகளுக்கும் இடையேனான டி20 தொடர் சமனில் முடிந்தது. இதனை அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளது. அதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் துணைக்கேப்டன் ரஹானே மற்றும் ரோஹித் ஷர்மா, புஜாரா போன்றோர் இடம் பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கலக்கிய ஹனுமன் விஹாரி மற்றும் மயன்ங் அகர்வால் உள்ளிட்டோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். மேலும் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களான இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது ஷமி இடம் பெற்றுள்ளனர். இந்த தொடரில் இளம் வீரர் ரிஷப் பந்த் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஹா விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Tags : #BCCI #RISHABHPANT #VIRATKOHLI #INDVSA #TEAMINDIA #CRICKET #TEST #WRIDDHIMANSAHA