‘25 ஆண்டுகால சாதனையைத் தகர்த்து’.. ‘தெறிக்கவிட்ட ஹிட்மேன்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Oct 05, 2019 07:01 PM

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா 25 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

Rohit Sharma breaks Navjot Sidhus records in Vizag Test

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து 71 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 7 ரன்களில் அவுட் ஆக ரோஹித் ஷர்மாவும், புஜாராவும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த ரோஹித் ஷர்மா இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 சிக்சர்கள், 2வது இன்னிங்ஸில் 7 சிக்ஸர்கள் என மொத்தமாக 13  சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.  இதன்மூலம் டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சித்துவின் (8 சிக்ஸர்கள்) 25 ஆண்டுகால சாதனையை அவர் முறியடித்துள்ளார். மேலும் இந்தப் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்துள்ள ரோஹித் ஷர்மா ஒரே டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சதமடித்துள்ள இந்திய வீரர் சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

Tags : #TEAMINDIA #INDVSSA #TEST #MATCH #ROHITSHARMA #SUNILGAVASKAR #SIX #RECORD #CENTURY