‘எந்த கிரிக்கெட் அகாடமியும் சேத்துக்கல’ ‘அதான் மகளோட முடிய வெட்டி மகன்னு சொல்லி சேத்தேன்’..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 04, 2019 12:19 PM

இந்திய இளம் கிரிக்கெட் வீராங்கனையான ஷஃபாலி வர்மா, தன் இளம் வயதில் ஆண் எனக் கூறி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shafali Verma disguised as a boy to enter cricket academy

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ஷஃபாலி வர்மா (15) கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். இதனை அடுத்து கடந்த செவ்வாய் கிழமை நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் 46 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் ஷஃபாலி வர்மாவை சிறு வயதில் ஆண் என கூறி கிரிக்கெட் அகாடமியில் சேர்த்ததாக அவரது தந்தை சஞ்சீவ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கிரிக்கெட் அகாடமியிலும் பெண் என்ற ஒரு காரணத்தால் ஷஃபாலிக்கு பயிற்சி அளிக்க மறுத்ததாக கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த தனது மகளை, ஆண் போன்று தலைமுடியை வெட்டி மகன் எனக் கூறி கிரிக்கெட் அகாடமியில் சேர்த்தாதாக தெரிவித்துள்ளார்.

Tags : #BCCI #SHAFALIVERMA #WOMANCRICKETER #TEAMINDIA #TEAMVELOCITY #WOMENT20CHALLENGE