‘உங்க வீட்டு டிவியில அவரோட ஆட்டம் தெரியலையா?’... ‘இல்ல அப்போ நீங்க தூங்கிட்டீங்களா?’... சேவாக்கை வறுத்தெடுத்த நட்சத்திர வீரரின் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Oct 08, 2019 09:30 AM

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், சில இந்திய வீரர்களை மட்டும் பாராட்டி முன்னாள் அதிரடி வீரர் சேவாக் பதிவிட்ட பதிவு ஒன்று, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Jadeja shares fan\'s tweet criticising Sehwag\'s tweet SA win

விசாகப் பட்டினத்தில் நடைப்பெற்ற தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில்  ரோகித் சர்மா, இரட்டை சதம் விளாசிய மயங்க் அகர்வால், புஜாரா, உலக சாதனையை சமன் செய்த அஸ்வின், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர், சிறப்பாக ஆடினர். இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து ட்வீட் செய்த முன்னாள் அதிரடி வீரர் சேவாக், ‘டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என நினைத்த ரோகித் சர்மாவிற்கு, இந்தப் போட்டி மிகவும் சிறப்பாக அமைந்தது.

அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்தியாவின் வெற்றிக்கு மயங்க் அகர்வால், ஷமி, அஸ்வின், புஜாரா ஆகியோரின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது’ என்று ட்வீட் செய்திருந்தார். ஆனால் இந்தப் போட்டியில் மொத்தமாக 70 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, அபாரமாக விளையாடிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை அவர் குறிப்பிடவில்லை.

இதையடுத்து ஜடேஜாவின் பெயரைக் குறிப்படாத  சேவாக்கை, அரவது ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்தனர். அதிலும் ரசிகர் ஒருவர், சேவாக்கின் ட்வீட்டிற்கு கீழே, ‘சேவாக் உங்கள் வீட்டு டிவியில் ஜடேஜாவின் சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங் தெரியலையா?... அவருடைய பீல்டிங் உங்க வீட்டு டிவி காட்டவில்லையா?... இல்லை, அப்போது நீங்க தூங்கிவிட்டீர்களா?...’ என்று கேட்டிருந்தார். இந்நிலையில், ரசிகரின் இந்த ட்வீட்டை தற்போது ரவீந்திர ஜடேஜா ரீ ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #RAVINDRA JADEJA #VIRENDHARSHEWAG #FANS #INDVSSA