'ராசா இவ்வளவு நாளா,நீ எங்க இருந்த?....உனக்கு பின்னாடி... 'ராக்கெட் சைன்ஸே' இருக்கு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | May 20, 2019 10:35 AM
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்து வீச்சிற்கு பின்னால்,ஒரு ராக்கெட் சைன்ஸ் இருப்பதாக ஐஐடி பேராசிரியர் ஒருவர் ஆச்சரியமளிக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் நட்சத்திர பௌலர் என்று சொன்னால் அது நிச்சயம் பும்ரா தான்.மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான காரண கர்த்தாவாக விளங்கியவரும் இவர் தான்.இறுதி போட்டியில் சென்னை அணி வீரர்களை திணறடித்த பும்ரா,4 ஓவர்கள் பந்து வீசி வெறும் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூட பும்ரா,எங்களின் மிகப் பெரிய சொத்து என புகழாரம் சூட்டினார். முன்னாள் நட்சத்திர பௌலர்கள் கூட 'நாங்கள் பும்ராவின் தீவிர ரசிகர்கள்' என கூறியுள்ளார்கள்.
இதனிடையே உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் வேளையில்,இந்திய அணியின் முக்கிய நட்சத்திர வீரராக பும்ரா பார்க்கப்படுகிறார்.அவர் இந்திய அணியின் வெற்றிக்கு நிச்சயம் முக்கிய பங்கு ஆற்றுவார் என,ரசிகர்கள் முதற்கொண்டு பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பும்ராவின் பந்து வீச்சிற்கு பின்னல் ராக்கெட் சைன்ஸ் இருப்பதாக ஐஐடி கான்பூர் பேராசிரியர் சஞ்சய் மிட்டல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சில சமன்பாடுகளையும் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அதில் பும்ரா பந்து வீசும் வேகம்,அப்போது அவரது உடல் வடிவ நிலை,பந்து சுழன்று போகும் வேகம் எல்லாம் சேர்ந்து மேக்னஸ் விளைவு ஏற்படுகிறது.இதன் மூலமே அவர் வீசும் பந்தின் கீழ்நோக்கிய விசை துல்லியமாக சென்று பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துகிறது.பும்ராவின் பந்து வீச்சில்,அவரின் பந்து திடீரென பவுன்ஸ் ஆகுவதற்கும் இது தான் முக்கிய காரணம் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
