'இந்த உலககோப்பையில இவர் தான் கெத்து'... 'பவுலிங்' மட்டுமல்ல... மொத்தத்தையும் தெறிக்க விடுவார்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 04, 2019 12:33 PM

வரவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும் எனவும்,அவர் ஒரு கலக்கு கலக்குவார் என இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Yuvraj Singh makes bold prediction about all-rounder Hardik Pandya

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள்,வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடைபெற இருக்கிறது.இதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடைபெற இருக்கின்றன. இதற்கான வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.

இதனிடையே நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்,என இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ''ஹர்திக் பாண்டியாவிடம் பேசிய போது தான் அவருடைய தற்போதைய பார்ம் குறித்து அறிந்துகொண்டேன்.தற்போது அவருக்கு இருக்கும் உடற்தகுதிக்கு இங்கிலாந்து மண்ணில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அவரால் சாதிக்க முடியும். கொல்கத்தா அணிக்கு எதிராக 34 பந்தில் 91 ரன்கள் அடித்து அசத்தினார்.

தற்போது அவர் இருக்கும் பார்ம் தான் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.நிச்சயம் அவர் உலகக்கோப்பையில் அதிரடியாகவும்,அணியின் சூழ்நிலை குறித்தும் ஆடுவர்'' என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.