'8 கோடிப்பு'...'அதிக விலைக்கு ஏலம்'..'விலகிய வீரர்'...அதிர்ச்சியில் அணி நிர்வாகம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | May 02, 2019 12:12 PM
தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகி இருப்பது பஞ்சாப் அணிக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் போது,தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ரூ.8.4 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.அவருக்கான அடிப்படை விலை ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், அதை விட 42 மடங்கு அதிகமாக அவர் ஏலம் எடுக்கப்பட்டார்.இது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.இதனால் வருண் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
நடப்பு ஐபிஎல் தொடரில்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அவர், அந்தப் போட்டியில் 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்.இதனிடையே சேப்பாக்கத்தில் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியின் போது வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டது.இதனால் அதற்கு அடுத்து நடந்த போட்டிகளில் அவரால் விளையாட முடியாமல் போனது.
சிகிச்சை முடிந்து மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,காயம் முழுவதுமாக குணமாகாத நிலையில்,எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகியதாக பஞ்சாப் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் அதன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமலேயே அணியிலிருந்து விலகி இருப்பது,அந்த அணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி. எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
