‘நீங்க இப்படியே தான் சர்ஜரி பண்ணீங்களா?’... ‘மாடலின் கிண்டலான கேள்விக்கு’... வைரலான பாண்ட்யாவின் பதில்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Oct 07, 2019 01:07 PM
லண்டன் மருத்துவமனையில் உள்ள ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவின் நகைச்சுவையான பதிவு ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது.

இடுப்புக்கு கீழ் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இந்தியாவில் நடைப்பெற்று வரும் தென் ஆப்ரிக்கா தொடரிலிருந்து விலகினார். காயத்திற்கு அறுவை சிகிச்சை எடுத்தால், நீண்ட நாள் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அடுத்துவரும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் பாண்ட்யா பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், சிகிச்சைக்காக லண்டனிற்கு, பாண்ட்யா சென்றார். அங்கு அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை நடந்தது.
அதன்பின்னர் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், அறுவை சிகிச்சை செய்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் ‘அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. எந்த நேரத்திலும் திரும்பி வருவேன்’ என பதிவிட்டிருந்தார். இதையடுத்து, ரசிகர்கள் பலரும் அவர் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இதற்கிடையில், ஹர்திக் பாண்டியாவின் பதிவுக்கு, பிரேசில் மாடலும், சில இந்திப் படங்களில் நடித்துவரும் நடிகையுமான இசபெல்லா, ஹர்திக் பாண்ட்யாவிடம் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் ‘நீங்கள் கையில் கடிகாரம் கட்டி கொண்டுதான் அறுவை சிகிச்சை செய்தீர்களா?...’ என நகைச்சுவையாக கேட்டார். அதற்கு பாண்டியா ‘எப்போதுமே இப்படித்தான் ஹா ஹா...’ என பதிலளித்துள்ளார். மிகவும் விலை உயர்ந்த, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடிகாரம், ராசியானது என ஏற்கனவே பாண்ட்யா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. யாருமே கவனிக்காததை இசபெல்லா கவனித்து கூறியிருப்பதாக, ரசிகர்கள் கூறிவரும்நிலையில், தற்போது இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.
did u do the surgery wearing the watch ? hahahahaha
— Izabelle Leite (@izabelleleite25) October 5, 2019
Always haha
— hardik pandya (@hardikpandya7) October 5, 2019
