இதான் பர்ஸ்ட் டைம்! ஆண்கள் கிரிக்கெட் உலகில் வரலாற்றில் முதல்முறையாக அதிசயம் நிகழ்த்தபோகும் பெண்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | Apr 28, 2019 12:50 PM
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் எனும் பெண்மணி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அதிசயத்தை நிகழ்த்தவுள்ளார்.
இவர் ஆடவர் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக களநடுவராக பணியாற்றவிருக்கிறார். இந்நிலையில், தற்போது நடந்து வரும் வேர்ல்ட் கிரிக்கெட் லீக் டிவிஷன்- 2 (World Cricket League Division 2) தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில்தான் இவர் நடுவராக பணியாற்றவுள்ளார்.
மேலும், ஐசிசி நடத்தும் சர்வதேச ஆடவர் கிரிக்கெட் போட்டியில் பெண் ஒருவர் நடுவராக பணியாற்றவுள்ளது இதுவே முதல்முறையாகும். இதனையடுத்து, ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ``ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் இன்று வரலாறு படைக்கப்போகிறார்” எனப் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில், 31 வயதாகும் கிளாரி கடந்த 2016 நவம்பர் முதல் கிரிக்கெட்டில் கள நடுவராக பணியாற்றி வருகிறார். இதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் 15 ஒரு நாள் போட்டியில் நடுவராகச் செயல்பட்டுள்ளார். கடந்த 2016 நவம்பர் மாதம் நடைப்பெற்ற ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியே இவரது முதல் போட்டியாகும். மேலும், இவர் ஐசிசி நடத்திய கிரிக்கெட் தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.