'பேட்டிங் மட்டுமல்ல'...நல்ல 'ஆல்ரவுண்டராவும்' இருப்பாரு...'திருநெல்வேலி' பையனுக்கு அடித்த ஜாக்பாட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Apr 16, 2019 10:45 AM
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.இந்த பட்டியல் பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளன. மே 30ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டிகள், ஜூலை 14ம் தேதி வரை சுமார் ஒன்றரை மாதம் நடைபெறவுள்ளன. இந்நிலையில் இந்திய அணியில் எந்தந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்பது குறித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய விவாதமே நடைபெற்றது.முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பட்டியலை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்ற தேர்வுக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில், விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியல் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.காரணம் அனுபவம் வாய்ந்த அம்பத்தி ராயுடு இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.ஆனால் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வீரர்களின் பட்டியலை அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்,வீரர்கள் தேர்வு குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் ''வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் திறனை வைத்து உலகக்கோப்பைக்கான தேர்வு நடைபெறவில்லை.மேலும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பிறகு நான்காவது இடத்திற்கு நிறைய வீரர்களை வைத்து முயற்சித்து பார்த்தோம்.அதே போன்று அம்பத்தி ராயுடுவிற்கும் சில வாய்ப்புகள் வழங்கப்பட்டன.ஆனால் அவரது ஆட்டத்தில் எங்களுக்கு முழுமையான திருப்த்தி இல்லை.
மேலும் நான்காவது இடத்திற்கு விஜய்சங்கரை களமிறக்குவது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டது. அவர் இக்கட்டான சூழ்நிலையில் போட்டியின் போக்கு அறிந்து விளையாடுவார் என நம்புகிறோம்.அதோடு விஜய் சங்கர் ஆல்ரவுண்டராக பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டார்” என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.