'ஏன் அப்படி செஞ்சீங்க 'கோலி'...மனுஷன் எப்படி 'டென்ஷன் ஆகுறாரு' பாருங்க...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 25, 2019 02:53 PM

ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது அஸ்வின் மற்றும் கோலியின் செயல்கள் சமூகவலைத் தளங்களில் வைரலாகியுள்ளது.

Kohli Gives An Abusive Send-Off To Ravichandran Ashwin

ஐபிஎல் போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில்,பெங்களூரு அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.இதில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியினை பதிவு செய்தது.தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணி,தற்போது பெற்று வரும் வெற்றிகள் அந்த அணி வீரர்களை உற்சாகமடைய செய்துள்ளது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,20 ஓவரில் 202 ரன்களை குவித்து அசத்தியது.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியினை தழுவியது.இந்த போட்டியின் போது,விராட் கோலியின் கேட்சை பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பிடித்த பின்னர் ஆக்ரோஷமாக கத்தினார்.இதைத்தொடர்ந்து பஞ்சாப் அணி விளையாடிய போது அஸ்வின் விளையாடிய முதல் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்த பின்னர், மீண்டும் ஒரு சிக்சர் அடிக்க முயன்றார். அது நேராக கோலியின் கையில் கேட்சானது.

இதையடுத்து விராட் கோலி,'நீ மான்கட் அவுட் செய்தவர் தானே' என்பதைப் போல பந்தை ஸ்டம்பில் அடிப்பது போல் ஆக்ரோஷமாக செய்கை செய்தார். இதையடுத்து பெவிலியன் திரும்பிய அஸ்வின் கோபமாக தனது கையுறைகளை தூக்கி எறிந்தார்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.