'என்னோட ரெக்கார்ட எடுத்து பாரு'...அப்புறமா பேசு...'கொந்தளித்த பிரபல வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Apr 20, 2019 01:35 PM
உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே சர்ச்சைகளும் தொடர்ந்து வருகிறது.இதற்கு முக்கியமான காரணம் ரிசப் பன்ட், அம்பதி ராயுடு ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்படாதது தான்.இதற்கு ஆதரவாகவும்,எதிர்ப்பு தெரிவித்தும் முன்னாள் வீரர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே அம்பதி ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டது தான் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.இது தொடர்பாக ட்விட்டரில் பயங்கரமாக வார்தை போர்கள் நடந்து வருகின்றன.ஆனால் தேர்வு குழு எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தினேஷ் கார்த்திக்கிற்கு அனுபவத்தின் அடிப்படியிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும்,அம்பதி ராயுடுவிற்கு போதிய போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட போதிலும் அவர் அதனை சிறப்பாக செய்யவில்லை எனவும் கூறியுள்ளது.
மேலும் விஜய் சங்கர் சிறப்பாக விளையாடிவருகிறார். பேட்டிங், ஃபீல்டிங், பௌலிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்படுவதால் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.இதனிடையே வீரர்கள் தேர்வில் பிசிசிஐ பாரபட்சம் காட்டுவதாக முன்னாள் வீரர் ஓஜா கருத்து தெரிவித்திருந்த நிலையில்,அவரின் கருத்திற்கு நெட்டிசன் ஒருவர் பதிலடி கொடுக்க,அது தற்போது விவாதமாக மாறியுள்ளது.
ஓஜாவின் பதிவிற்கு பதிலளித்த நெட்டிசன் 'ஓஜாவின் பௌலிங் ஆக்ஷன் சர்ச்சைக்குள்ளான பிறகுதான் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. இதில் எங்கிருந்து பிசிசிஐ பாரபட்சம் காட்டுகிறது என கேள்வி எழுப்பியிருந்தார்.இதனால் கோபமடைந்த ஓஜா அதற்கு பதிலளிக்கும் விதமாக ''நீங்கள் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கிறீர்களா? பௌலிங் ஆக்ஷன் சர்ச்சை சம்பவத்துக்குப் பின், எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்.முட்டாள்தன தோட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்'' என கொந்தளித்திருந்தார்.
இதனிடையே வீரர்கள் தேர்வு தொடர்பான சர்ச்சைகளுக்கு பிசிசிஐ தகுந்த விளக்கம் அளிக்காத வரையில், இது போன்ற விவாதங்களுக்கு முற்று புள்ளி வைப்பது கடினம்.
