‘தல’யவே ஏமாத்திட்டாய்ங்களா.. எடு ரூ.40 கோடிய.. தனியார் நிறுவனத்தை பதறவைக்கும் தோனியின் பிரில்லியண்ட் மூவ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Apr 28, 2019 12:40 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய ஐபிஎல் பொட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி தற்போதைய தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு தொடங்கி 2016ஆம் ஆண்டு வரை அமரபல்லி விளம்பர நிறுவனத்தின் தூதராக தோனி இருந்து வந்த தோனி இந்த நிறுவனத்தின் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னதாக, அமரப்பல்லி குழும நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருந்தபோது தோனி, பென்ட்ஹவுஸ் திட்டத்தின் கீழ் தனக்கான வீட்டினை 20 லட்சம் ரூபாய்க்கு புக் செய்திருந்தார். ஆனால் அந்த விளம்பரத் தூதராக இருந்ததற்கான சம்பளமும் வரவில்லை தன் பெயரிலான பெண்ட்ஹவுஸ் வீடும் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறி, அமரப்பல்லி நிறுவனத்தின் மீது மோசடி புகார் அளித்த தோனி, மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
இதனிடையே நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டுள்ள இந்நிறுவனத்திடம் சுமார் 46 ஆயிரம் பேர் தங்களுடைய பணத்தை கொடுத்த பின்பும் அவர்களுக்கான வீடுகளை இன்னும் இந்த நிறுவனம் ஒதுக்கித் தரவில்லை என்பதால், பலரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் அமரப்பல்லி நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து விபரங்களை முழு ஆதாரங்களுடன் நீதிமன்றம் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த ஜனவரி 25ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் இரண்டு கட்டுமானங்களையும் விரைந்து முடிக்குமாறு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் அமரப்பல்லி குழும நிறுவனத்திடம் 40 கோடி ரூபாய் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தோனி தொடர்ந்துள்ள வழக்கு சூடுபிடித்துள்ளது.