'மரண பயத்தை காட்டிட்டியே பரமா'...கொண்டாடிய 'நெட்டிசன்கள்'...மிரண்டு போன 'கோலி'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Apr 22, 2019 12:12 PM
ஐபிஎல்டி20 போட்டியின் 39-வது லீக் ஆட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது.டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பௌலிங்கை தேர்ந்தெடுத்தார்.இதையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது.162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.
இதனிடையே நேற்றைய போட்டியில் சென்னை அணி தோல்வியினை தழுவினாலும், தோனி அனைவரது இதயத்தையும் வென்று விட்டார் என,நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.அதற்கு கடைசி ஓவரில் தோனி அடித்த ஒவ்வொரு ஷாட் தான் காரணம்.இறுதிவரை ஆட்டமிழக்காமல் தோனி 48 பந்துகளுக்கு 84 ரன்கல் சேர்த்தார் இதில்7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.கடைசி ஓவரில் தோனி ஆடிய ஆட்டத்தை பார்த்த போது கோலி,மரண பீதியில் மிரண்டே போனார் என கூறலாம்.போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்ற பின்பு தான் அவரின் முகத்தில் புன்னகையை பார்க்க முடிந்தது.
வெற்றிக்கு பிறகு பேசிய விராட் கோலி 'எங்களது அணியின் பௌலர்கள் நன்றாகவே பந்து வீசினார்கள்.கடைசி ஓவரில் கடைசிப்பந்தில் நடந்த ரன்அவுட் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். அதுபோல் நடந்துவிட்டது.தோனி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அவரது அதிரடியான ஆட்டத்தின் மூலம்,ஒட்டுமொத்த அணிக்கும் தோனி மிகப்பெரிய பயத்தை காட்டிவிட்டார் " எனத் தெரிவித்தார்.