திடீரென உயிரிழந்த கிரிக்கெட் ஆல் ரவுண்டர்..! சோகத்தில் கிரிக்கெட் உலகம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 19, 2019 06:18 PM

ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான கான் டி லாங்கே உடல்நலகுறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Scotland all rounder dies aged 38 after brain tumour

38 வயதான கான் டி லங்கே கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற டி20 தொடர் மூலம் ஸ்காட்லாந்து அணிக்கு அறிமுகமானவர். இவர் ஸ்காட்லாந்து அணிக்காக 13 ஒரு நாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் 2017 -ம் ஆண்டு கால கட்டத்தில் ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் திகழ்ந்த காலின் கடந்த ஒரு வருடமாக மூளையில் உருவான கட்டியால் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சையை மேற்கொண்டு வந்த காலின் நேற்று(18.04.2019) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Tags : #CRICKET #PLAYER #DIED