'தோத்தாலும் இதுல நாங்க கெத்தா இருப்போம்'...'சென்னை சூப்பர் கிங்ஸ்' அதிரடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 27, 2019 01:30 PM

ஐபிஎல் தொடரின் 44வது லீக் போட்டியில் சென்னை அணி தோல்வியினை சந்தித்த போதிலும்,புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

Chennai Super Kings continue to occupy top spot on the IPL table

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்,டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது.சென்னை அணியில் தோனி, ரவிந்திர ஜடேஜா, ஆகியோருக்கு காய்ச்சல்  காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு பதிலாக சாண்ட்னர், துருவ் ஷோரே, முரளி விஜய் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தார்கள்.இதனைத்தொடர்ந்து சென்னை அணி 17.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியினை தழுவியது. சென்னை அணி தோல்வியினை தழுவிய போதும் தொடர்ந்து முதலிடத்தில் தொடர்கிறது.மும்பை அணி 14 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.