‘3டி க்ளாஸ் ஆர்டர் பண்ணிட்டேன்’.. உலகக் கோப்பை குறித்து பரபரப்பை ஏற்படுத்திய இந்திய வீரரின் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 16, 2019 07:43 PM

உலகக் கோப்பையில் தான் தேர்வாகதது குறித்து இந்திய வீரர் அம்பட்டி ராயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Ambati Rayudu comes up with a sarcastic message on twitter

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் நேற்று பிசிசிஐ அறிவித்தது .

கடந்த 2015 உலகக் கோப்பையில் இடம்பெற்ற தோனி, ஷிகர் தவான், ஜடேஜா, விராட் கோலி, புவனேஸ்வர் குமார், முஹமது ஷமி, ரோஹித் சர்மா ஆகிய 7 வீரர்களுக்கு இந்த முறையும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இரண்டு தமிழ்நாட்டு வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

2015 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்த ராயுடு, இந்தமுறை தேர்வாகவில்லை. அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் தேர்வாகியுள்ளதாகத் தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் கூறியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய நீக்கம் குறித்து ட்விட்டரில் மறைமுகமாக தன்னுடைய வருத்தத்தை அம்பட்டி ராயுடு பதிவு செய்துள்ளார். அதில் உலகக் கோப்பைப் போட்டியை பார்க்க இப்போதுதான் 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #MENINBLUE #CWC19 #ICC #AMBATI RAYUDU