'நம்ம சென்னை'யில விசில் போட முடியாது'...'ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 23, 2019 11:00 AM

2019 ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IPL 2019 final shifted from Chennai to Hyderabad

ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 2 ஆண்டுகள் தடைக்குப்பிறகு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 2-வது இடம்பிடித்தது.இதனால் நடப்பு சீசனின் தொடக்கப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.அதே போன்று இறுதி போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

இதனிடையே சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ,மே 12-ம் தேதி சென்னையில் நடைபெற இருந்த இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.‘குவாலிஃபயர் 1’ போட்டி சென்னையிலும், ‘எலிமினேட்டர்’ மற்றும் ‘குவாலிஃபயர் 2’ ஆகிய இரு போட்டிகள் விசாகப்பட்டினத்திலும் நடைபெற இருக்கிறது.சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும்  மூன்று கேலரிகளுக்கு அனுமதி கிடைக்காமல் இருந்த காரணத்தால்,அதற்குரிய அனுமதியினை பெறுவதற்காக,ஒரு வார காலம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு பிசிசிஐ அளித்திருந்தது.

ஆனால் பாதுகாப்பு காரணங்களால் மூன்று கேலரிகள் பயன்பாட்டுக்கு அனுமதி கிடைக்காமல் இருக்கும் காரணத்தினால்,இறுதி போட்டியினை ஹைதராபாத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் ரசிகர்களின் வருகையை அதிகரிக்கலாம் ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.