நல்ல பேட்டிங் ஆவரேஜ் இருந்தும் ஏன் இவர எடுக்கல?.. கேள்வி எழுப்பிய ஐசிசி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 15, 2019 08:42 PM

உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் பட்டியலில் அம்பட்டி ராயுடு இடம் பெறாதது குறித்து என ஐசிசி கேள்வி எழுப்பியுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பை வரும் மே மாதம் 30 -ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கின்றன.

உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை தேர்வு குழு தலைவர்  எம்.எஸ்.கே. பிரசாத் இன்று அறிவித்தார். இதில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் ஆகியோருக்கு இடம் கிடைத்தது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்பட்டி ராயுடு, ரிஷப் பண்ட் உள்ளிட்டோருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பேட்டிங்கில்  அதிக ஆவரேஜ் வைத்திருந்தும் ஏன் அம்பட்டி ராயுடுவை உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்கவில்லை என ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது. தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அம்பட்டி ராயுடு விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

India World Cup 2019 Squad: Ambati Rayudu miss out

1. @imVkohli – 59.57
2. @msdhoni – 50.37
3. @ImRo45 – 47.39
4. @RayuduAmbati – 47.05
5. @sachin_rt – 44.83

Rayudu was excluded from India's @cricketworldcup squad. Do you think he should have made the cut? pic.twitter.com/8Eu0ztKTH1

— ICC (@ICC) April 15, 2019
Tags : #ICCWORLDCUP2019 #ICC #CSK #AMBATIRAYUDU