'எனக்கும் இதே தான் நடந்துச்சு'...'அவர் இல்லன்னு தெரிஞ்சதும் கதறினேன்'...மனம் திறந்த பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Apr 17, 2019 01:33 PM
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த உலகக்கோப்பைக்கான வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.அந்த அணியில் அம்பத்தி ராயுடு கண்டிப்பாக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படவில்லை.
அம்பத்தி ராயுடு அணியில் சேர்க்கப்படாததது பலருக்கு அதிர்ச்சியையும்,ஆச்சரியத்தையும் அளித்தது.இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், இன்னாள் பாஜக உறுப்பினருமான கவுதம் கம்பீர், ‘ராயுடு உலகக் கோப்பை இந்திய அணியில் சேர்க்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.அவர் அணியில் இல்லை என்பதை தெரிந்ததும்,நான் மனமுடைந்து அழுததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் ''ஒருநாள் போட்டிகளில் 48 பேட்டிங் சராசரி வைத்திருக்கும் ஒருவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.2007 ஆம் ஆண்டு, என்னையும் இதைப் போன்றுதான் அணியில் சேர்க்கவில்லை. அப்போது நான் எப்படி உணர்ந்தேன் என்பது எனக்குத் தெரியும். கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் உலகக்கோப்பையை போட்டியில் விளையாட வேண்டும் என்பது பெரிய கனவாகும்.2007 ஆம் ஆண்டு எனக்கு என்ன நிகழ்ந்ததோ,அதே போன்று தான் தற்போது ராயுடுவுக்கும் நிகழ்ந்திருப்பதாக கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய ஒருநாள் தொடரிலும், ராயுடு ஃபார்ம் இல்லாமல் திணறி வந்தார். இதைப் போன்ற காரணங்களால் ராயுடு அணியில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.