‘பெண்கள் மோதிக்கொள்ளும் டி20 கிரிக்கெட் போட்டிகள்’.. லிஸ்டை அறிவித்த பிசிசிஐ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | Apr 26, 2019 01:40 PM
மே 6 ஆம் தேதி துவங்கி மே 11 ஆம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள பெண்கள் டி20 சேலஞ்ச் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி, சூப்பர் நோவாஸ் அணியை ஹர்மன் ப்ரித் கவுரும், ட்ரையல் ப்ளாசர்ஸ் அணியை ஸ்மிர்தி மந்தனாவும், வெலாசிட்டி அணியை மிதாலிராஜ்ஜூம் வழி நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 3 அணிகளின் பயிற்சியாளர்கள் மற்றும் அணியில் பங்கேற்றுள்ள மொத்த வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதன்படி, சூப்பர் நோவாஸ் அணிக்கு இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் டபள்யூ. வி. ராமனும், ட்ரயல் ப்ளாசர்ஸ் அணிக்கு பிஜூ ஜார்ஜூம், வெலாசிட்டி அணிக்கு முன்னாள் இந்திய பெண்கள் அணி கேப்டன் மமதா மபீனும் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 3 அணியில் பங்கேற்றுள்ள வீரர்களின் விவரம் பின்வருமாறு:
சூப்பர் நோவாஸ்:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அனுஜா பட்டீல், சமரி அட்டப்பட்டு (இலங்கை), ஜெமினா ரோட்ரிகஸ், டஹூஹூ ( நியூசிலாந்து, மன்சி ஜோஷி, நடாலி ஸ்வைர்(இங்கிலாந்து), பூனம் யாதவ், ப்ரியா புனியா, ராதா யாதவ், சோபி டிவைன் (நியூசிலாந்து), தனியா பாட்டியா (கீப்பர்).
ட்ரையல் பிளாசர்ஸ்:
மந்தனா(கேப்டன்), புல்மலி, ஹேமலதா, தீப்தி, ஹர்லின் டியோல், ஜசியா அக்தர், ஜுலான் கோஸ்வாமி, கல்பனா(கீப்பர்), ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷகிரா(மேற்கிந்திய தீவுகள்), எல்ஸ்டோன்(இங்கிலாந்து), ஸ்டாஃபைன் டெய்லர்(மேற்கிந்திய தீவுகள்), சூசிபேட்ஸ்(நியூசிலாந்து)
வெலாசிட்டி:
மிதாலிராஜ்(கேப்டன்), அமெலியா கெர்(நியூசிலாந்து), டேனியல் வாட்(இங்கிலாந்து), வைத்யா, எக்தா பிஷட், ஹெலே மேத்யூஸ்( மேற்கிந்திய தீவுகள்), ஜஹனரா ஆலம்(பங்களாதேஷ், கோமல், ஷஃபாலி வர்மா, ஷிகா பாண்டே, சுஷ்மா வெர்மா(கீப்பர்), திப்யதர்ஷினி, வேதா கிருஷ்ணமூர்த்தி.
