மீண்டும் கோவம்.. தொடரும் சர்ச்சை.. தோல்வியில் முடிந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 28, 2019 01:29 AM
ஐபிஎல் டி20 6 -வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்-கொல்கத்தா அணிகளிகளுக்கு இடையேயான 6 -வது ஐபிஎல் டி20 லீக் போட்டி இன்று(27.03.2019) கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது
டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். 20 ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 218 என்ற இமால இலக்கை வைத்தது. இதில் ராபின் உத்தப்பா(67), நிதிஷ் ரானா(63) ஆகியோர் அரை சதத்தைக் கடந்தனர். மேலும் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரான ரசல் 17 பந்துகளில் 48 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 5 சிக்சர்கள், 3 பவுண்ட்ரிகள் அடித்துள்ளார்.
அப்போது 3 ரன்னில் இருக்கும் போது பஞ்சாப் அணி வீரர் முகமது ஷமி வீசிய பந்தில் ரசல் போல்ட் ஆனார். ஆனால் நடுவர் அதை நோ பால் என அறிவித்தார். அதற்கு காரணம் விதிகளின் படி 3 பீல்டர்கள் இருக்கவேண்டிய இடத்தில் கூடுதலாக 4 வீரர்கள் இருந்ததால், அப்போது வீசப்பட்ட பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த சமயம் அஸ்வின் சற்று கோவமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 190 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.