‘ரூல்ஸ் படி நடந்தா இப்டியா போட்டோவ கிழிச்சு அசிங்கப்படுதுறது’.. அஸ்வின் பதில்?.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 05, 2019 01:22 AM
மன்கட் சர்ச்சையால் தனது போட்டோவை கிழித்த இங்கிலாந்து வீரருக்கு அஸ்வின் தக்க பதிலடி கொடுத்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் டி20 லீக் 12 -வது சீசன் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் பேட்ஸ்மேன் பட்லரை, பஞ்சாப் அணியின் கேப்டன் மன்கட் முறையில் அவுட்டாக்கினார்.
இது உலகம் முழுவதும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த அஸ்வின், கிரிக்கெட்டில் இருக்கும் விதிக்கு உட்பட்டே தான் நடந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் இது குறித்து தெரிவித்திருந்த பட்லர், அஸ்வின் செய்த செயல் வருத்தமளிப்பதாகவும், இதனால் அடுத்து நடந்த போட்டிகளில் சரியான கவனம் செலுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக அஸ்வின் போட்டோவை கிழித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை அடுத்து இதற்கு பதிலளித்த அஸ்வின்,‘இன்று நான் செய்தது தவறாக தெரியலாம். ஆனால் நாளை அதே போல் மன்கட் முறையில் அவரும் விக்கெட் எடுக்கும் சூழ்நிலை வரலாம். கிரிக்கெட்டில் மன்கட் விதி இருக்கும் போது இதுபற்றி பேசுவது அவசியமில்லை என நினைக்கிறேன்’ என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
EXCLUSIVE: @jimmy9 give us his unique take on @josbuttler’s controversial run out last week...
— Greg James (@gregjames) March 31, 2019
More rows should be settled like this.
Full story on this week’s #Tailenders https://t.co/YOQ4PMSwiu pic.twitter.com/hYCPpdSqJm
